‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துஇருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன.

இதையும் பாருங்க : ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த Vj ஐஸ்வர்யா – எப்படி இருந்து இப்படி ஆகிட்டாங்க பாருங்க.

Advertisement

தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட கருடன் முதல் கழுதை, குதிரை என்று பல குறியீடுகளை வைத்து இருந்தார்.

அந்த வகையில் இந்த படத்தில் பல பிரேமில் குதிரையுடன் வந்த இந்த பையனையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதிலும் இவர் குதிரை மீது சாவாரி செய்யும் காட்சிகளுக்கு கிளாப்ஸ் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் அவர் கர்ணன் படத்தில் பயன்படுத்திய ‘அலெக்ஸ்’ என்ற குதிரை காலமாகி இருக்கிறது. அந்த குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement
Advertisement