அசுரன் படத்த 'நாரப்பானு' நாறடிச்சது பத்தாம, இப்போ கர்ணன் படத்திலும் கைவைத்த தெலுங்கு இயக்குனர். ஹீரோ யார் தெரியுமா ?

By Rajkumar · 28/4/2021

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட 'கர்ணன்' படத்தின் தெலுங்கு ரீ - மேக் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : மீண்டும் கர்ப்பமான சாண்டி மனைவி - தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த லாலா - குயூட் புகைப்படம் இதோ.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீ - மேக் விரைவில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். இதில் நாயகனாக அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் யார் என்பது விரைவில் முடிவாகும். ஏற்கனவே தனுஷ்ஷுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்று ரீ - மேக் செய்துள்ளனர். இதில் தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீ -மேக்கில் தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. (அந்த கோர்ட் சீன்ல பவன் கல்யாண் டேபிளை எல்லாம் தூக்கி அடிக்கிறத பாத்துமா அந்த படம் ஹிட் ஆச்சி.)

behindtalkies AMP · Quick view
View full