மீண்டும் கர்ப்பமான சாண்டி மனைவி – தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த லாலா – குயூட் புகைப்படம் இதோ.

0
13210
sandy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டொபர் 6 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரன்னர் அப்பான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள்பலராலும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வந்தார். சாண்டி, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதர்க்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார்.

இதையும் பாருங்க : நடிகை விந்தியாவிற்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – அதுக்கு அவர் கொடுத்த பதிலடிய பாருங்க.

- Advertisement -

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார்.விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது .. மேலும், பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கானா பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

இந்த சீசனில் சண்டிக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அவரது மகள் லாலா தான். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த எபிசொட் ரசிகர்கள் மறக்க முடியாத எபிசோடாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சாண்டியின் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு வீட்டில் சிம்பிளாக வளைகாப்பு நடந்தது. தனது அம்மாவிற்கு லாலா நலங்கு வைத்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று சாண்டியின் மனைவி கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement