சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தின் மீதான வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட் அறிவித்திருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தின் மீதான வழக்கு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஷோபனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் பாணியில் உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

கோச்சடையான் படம்:

இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படம் சுமாரான வசூலை அள்ளியது என்று சொல்லலாம். இதனையடுத்து இந்த படத்தின் பணம் தொடர்பான விஷயம் குறித்து 2014-ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை உத்தரவு பெற்று இருந்தார்.

மீடியா ஒன் குளோபல் நிறுவனம் அளித்த புகார்:

இதனை அடுத்து மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பெங்களூரில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் புகார் அளித்து இருந்தது. மேலும், இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினி மூலம் போடப்பட்ட உத்தரவை நீக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. அதோடு கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இருந்தது.

Advertisement

கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த லதா:

இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதி வழங்கியது. இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என லதா ரஜனிகாந்த் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியிருப்பது, லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் தொடரப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

நீதிபதி அளித்த தீர்ப்பு:

கோச்சடையான் படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து லதா ரஜினிகாந்த்துக்கு விலக்கு அளித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement