பரிந்துரை கூறிய கார்த்தி சிதம்பரம் – Mp என்று கூட கண்டுகொள்ளாமல் இருந்த மாளவிகா. வச்சி செய்யும் நெடிசன்கள்.

0
324
malavika
- Advertisement -

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம், நடிகை மாளவிகா மோகனுக்கு ட்விட்டரில் பரிந்துரைத்த பதிவு பெரும் வரைலாகி வருகிறது. சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் தேர்தல் மேலாளராகப் பணியாற்றினார். தற்போது அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2014 ஆம் ஆண்டில் சிவகங்கைச் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச். ராஜாவை 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.இதுவரை சிவகங்கை கண்டுள்ள 13 மக்களவை தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது அது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துள்ளது தெரிகிறது.

இதையும் பாருங்க : தன் மகனின் 21 பிறந்தநாளில் அவரின் புகைப்படங்களை பதிவிட்ட வனிதா – ப்பா, என்னய்ய இது ஆளே மாறி வேற மாதிரி இருக்காரு.

- Advertisement -

பரிந்துரை கேட்ட மாளவிகா :

இது ஒருபுறம் இருக்க கார்த்தி சிதம்பரம் வீட்டில் சமீபத்தில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது என்பதும் இதனை தொடர்ந்து அவருடைய ஆடிட்டர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ’ஏதாவது புதிய படம் அல்லது வெப் தொடர் பார்க்கலாம் என்றால் எதை பரிந்துரை செய்வீர்கள்? என தனது ஃபாலோயர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பரிந்துரை செய்த கார்த்தி சிதம்பரம் :

இதற்கு பலரும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களை பரிந்துரை செய்தனர்.இந்த நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் ’இன்வெண்டிங் அன்னா’ என்ற வெப்தொடரை மாளவிகா மோகனனுக்கு பரிந்துரை செய்துள்ளார். கார்த்திக் சிதம்பரத்தின் இந்த பதிவு பெரும் வைரலாக பரவ பலரும் பல விதமான கமெண்டுகளை குவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு மாளவிகா மோகன் எந்த பதிலையும் கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

கண்டுகொள்ளாத மாளவிகா :

இருப்பினும் இதே ட்வீட்டிற்கு மற்றவர்கள் சொன்ன பரிந்துரைகளுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார் மாளவிகா. இதனால் ட்விட்டர் வாசிகள் பலரும் கார்த்திக் சிதம்பத்திரத்தின் இந்த பதிவை வச்சி செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் ‘பார்லிமெண்ட் அனுப்பி மக்கள் பிரச்சனை பேச சொன்னா இந்த ஆளு நடிகைககு என்ன படம் பாக்கலாம்னு சொல்லி tweet போட்டுகிட்டு இருக்கான் என்று கேலியாக கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால், மாளவிகா தன்னிடம் ஏடாகூட கேள்விகள் கேட்பவர்களுக்கு மட்டும் பதில் அளித்து இருக்கிறார்.

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒவருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ‘எப்படி அது இவ்வளவு பெருசாக ஆனது’ என்று மோசமாக கேட்டிருந்தார்.

மற்றவர்களுக்கு ரிப்லை :

இதற்கு பதில் அளித்த மாளவிகா ‘ சமூக ஊடகங்களில் சில ஆண்களின் தைரியம் எவ்வளவு பெரியது, இல்லையா? அதை நினைத்து நான் கூட திகைத்து இருக்கிறேன்’ என்று பதில் கொடுத்தள்ளார். இன்னோரு ரசிகரோ ”உங்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் சமூக வலைதளத்தில் உங்களின் ஹாட் போட்டோ ஷூட் மூலம் கவரப்பட்டவர்கள் தான் என்று கூறி இருந்தார்.

IMG 20220518 175155

இதற்கு பதில் அளித்த மாளவிகா ‘அப்போ நீங்களும் என் போட்டோ ஷூட்டை பார்த்து எனக்கு ரசிகராகி என்னை ட்விட்டரில் பாலோ செய்கிறீர்களா’ என்று கேள்வியை கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ‘மாறன் படத்தில் படுக்கை அறையின் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும். அதை எத்தனை முறை எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா மோகனன் கூறியிருப்பது, அதை விட உங்கள் மண்டைக்குள் இருப்பது மோசமான இடம் என்று பதிலளித்திருக்கிறார்.

Advertisement