முதன் முறையாக தனது அண்ணியுடன் கார்த்தி எடுத்துக்கொண்ட செல்பி. வைரலாகும் புகைப்படம்.

0
123289
karthik-surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்திக். மேலும்,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கைதி’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் இது தான். மேலும், நடிகர் கார்த்திக்கின் திரை பயணத்தில் இந்த படம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அவர்கள் தனது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். அதோடு கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும்,இவர்களுக்கு அம்மா,அப்பாவாக சீதா,சத்யராஜ் ஆகியோர் நடித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நடிக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் அண்ணன்– தங்கை, அண்ணன்— தம்பி பாச கதைகள் தான் அதிகம் பார்த்திருப்போம். இந்நிலையில் அக்கா– தம்பி பாசம் கொஞ்சம் கம்மி தான். சமீபத்தில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்கா– தம்பி பாசத்தை சொல்லி இருந்தார்கள். மேலும், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து கார்த்திக்– ஜோதிகா நடிப்பில் வரும் இந்த தம்பிக்காக அக்கா காத்திருப்பது போன்ற உணர்வுப் பூர்வமான படம் மக்களிடையே வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவயதில் பிரிந்து போன தம்பி அக்காவிடம் ஒன்று சேருவாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், நிறைய சஸ்பென்ஸ் காட்சிகளையும் வைத்துள்ளார் இயக்குனர். இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சமீபத்தில் தான் தம்பி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதை தமிழில் நடிகர் சூர்யா, மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகார்ஜுனா என மூன்று மொழிகளிலும் தம்பி படத்தின் டீசரை வெளியிட்டார்கள். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன், சண்டைக் காட்சிகளும், அக்கா-தம்பி பாச போராட்டமும் நிறைந்த படமாக தம்பி படம் அமைந்துள்ளது. மேலும், இந்த படம் அடுத்த மாதம் திரையரங்கிற்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர். இந்த நிலையில் தம்பி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஸ்பாட்டிலேயே நடிகர் கார்த்திக் அவர்கள் தம்பி படக்குழுவினருடன் சில செல்ப்பிகளை எடுத்து உள்ளார்.

மேலும், தனது அண்ணியான ஜோதிகாவுடனும் முதன் முறையாக செல்ஃபீ எடுத்துக்கொண்டுள்ளார். அவர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ’96’ படத்திற்கு இசை அமைத்த கோவிந்த வசந்தா அவர்கள் தான் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தின் தலைப்பு ஏற்கனவே சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த தம்பி படத்தின் தலைப்பு ஆகும். அதோடு இந்த தம்பி படத்தின் தலைப்பு உரிமையை படக்குழு முறையாக பெற்று உள்ளது.

-விளம்பரம்-
Advertisement