சார்பட்டா படம் பற்றி 7 வருடத்திற்கு முன்னரே மேடையில் பேசியுள்ள கார்த்தி - படத்தை பார்த்துவிட்டு போட்டுள்ள ட்வீட்.

By Rajkumar · 28/7/2021

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் தவறவிட்ட படத்தை வேறு ஒரு நடிகர் நடிப்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படமும் விதிவிலக்காக அமையவில்லை. கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் பாரட்டப்பட்டு வருகிறது.

https://twitter.com/Jaddu_offi/status/1419506898475225088

அதே போல இந்த படத்தில் ஆர்யாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து பல ஆண்டுக்கு முன்னரே பேசியுள்ளார் நடிகர் கார்த்தி. அட்டகத்தி படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கார்த்திக்கும் ஒரு நல்ல திருப்பு முனை படமாக அமைந்து இருந்தது.

இதையும் பாருங்க : HBDDhanush - நான் படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதற்கு முழு காரணம் இது தான் - இயக்குனரே சொன்ன சீக்ரெட்.

இப்படி ஒரு நிலையில் மெட்ராஸ் படத்தின் விழா ஒன்றில் பேசியுள்ள கார்த்தி, இந்த படத்திற்கு முன்பாகவே 'சார்பட்டா' என்ற படம் பண்ணுவதாக இருந்தது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு கார்த்தி பதிவிட்டுள்ளதாவது, சார்பட்டா படம் ஆரம்பத்தில் இருந்தே நம் கவனத்தை ஈர்த்து பழைய மெட்ராஸுக்கு கூட்டி சென்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த படத்தின் ஓவ்வொரு கதாபாத்திரமும் அருமை, ஒட்டு மொத்த படக்குழுவின் கடின உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/sfcunity/status/1334032845199667200

ஏற்கனவே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித்திடம், 'சார்பட்டா பரம்பரை' படம் சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையா என்று கேள்வி கேட்டகப்பட்டது.அதற்கு சிரித்துகொண்டே பதில் அளித்த ரஞ்சித், இந்த படத்திற்காக பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது சூர்யா உட்பட எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால்தான் இந்த படம் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full