HBDDhanush – நான் படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதற்கு முழு காரணம் இது தான் – இயக்குனரே சொன்ன சீக்ரெட்.

0
2006
dhanush
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ சினிமா பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவில் கலக்கி வருகின்றனர். விஜய், ஜெயம் ரவி, ஜீவா, அதர்வா, சூர்யா, கார்த்தி என்று இப்படி எத்தனையோ நடிகர்களை சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடைந்தது. அதை தொடர்ந்து வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இன்று தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனுஷ், சூப்பர் ஹிட் படமான ‘நான்’ படத்தை தவறவிட்டுள்ள காரணத்தை பற்றி பார்க்கலாம்.

இதையும் பாருங்க : HBDDhanush – நான் படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதற்கு முழு காரணம் இது தான் – இயக்குனரே சொன்ன சீக்ரெட்.

- Advertisement -

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர், தாண்டவம் படத்தின் போதே ஆஸ்கார் ரவி சாருக்கு நான் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்ததால் தனுஷிடம் கதையை சொல்ல ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். பொல்லாதவன் பட ஷூட்டிங்கில் இருந்த தனுஷிடம் கதை சொல்ல போறேன்.

This image has an empty alt attribute; its file name is 1-69.jpg
இயக்குனர் ஜீவா ஷங்கர்

முதன் முறையாக ஒரு நடிகருக்கு கதை சொல்லப் போகிறேன் என்பதால் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர் என்னை ஒன்னும் பிரச்சனை இல்லை என்று என்னை கூல் பண்ணி கொண்டே இருந்தார். அவர் கதை கேட்ட நேரத்தைவிட என்னை ஆறுதல் செய்த நேரம் தான் அதிகம். இப்படி ஒரு இயக்குனர் எனக்கு கதை சொல்ல வந்திருந்தால் அதை நானே ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவர் இரண்டு நாள் டைம் கேட்டு யோசித்து சொல்கிறேன் என்று சொன்னார். பின்னர் இரண்டு நாள் கழித்து இந்த படத்தில் தான் நடிக்க மறுக்கும் காரணம் குறித்து நீண்ட நேரம் என்னிடம் பேசினார். அவர் நடிக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் கதையை ஒழுங்காக சொல்லவில்லை என்பதால் தான்.

-விளம்பரம்-
Advertisement