ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் கார்த்திகை தீபம் ஒன்று. கார்த்திக்-தீபா திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்தது. இருந்தாலுமே இவர்கள் இடையே இருந்த காதல் அதிகமானது. ஒரு கட்டத்தில் எதிரிகள் தீபாவை கொலை செய்ய முயன்றார்கள். இருந்தும் போராடி கார்த்திக் அவரை காப்பாற்ற பார்த்தார். ஆனால், தீபா இறந்து விடுகிறார். கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன் முதல் சீசன் முடிவுக்கு வந்தது.
தற்போது புதிய கதைக்களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் தொடங்கி இருக்கிறது. ஒரு ஊரில் பெரிய அரண்மனை, காலம் காலமாக இந்த ஊரில் கோவில் ஒன்று பூட்டப்பட்டு இருப்பதால் மழை இல்லாமல் ஊர் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்கள். இதனால் அந்த ஊரின் பெரிய மனுஷன் ராஜா சேதுபதியிடம் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோவிலை திறக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்கள். பின் எல்லோரும் கோவிலை திறக்க கோவில் அருகே திரண்டு இருந்தார்கள்.
கார்த்திகை தீபம்:
அப்போது விருமன், அதை விமர்சிக்க, இதனால் ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் அங்கிருந்து கிளம்ப, உடனே அங்கு வந்த ஒருவன், பெரிய சம்பட்டி எடுத்து கோவில் பூட்டை அடித்து உடைத்து திறந்தார்.
எல்லோரும் ஷாக் ஆனார்கள். கடைசியில் அந்த கோவிலை திறந்தது கார்த்திக் தான் என்பது தெரிய வருகிறது. கார்த்திக்கின் என்ட்ரி செம மாஸாக இருந்தது. நேற்று எபிசோட்டில், கார்த்திக் கோவிலை திறந்தது சிவலிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றியது, உடனே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டார்கள்.
நேற்று எபிசோட்:
அதன் பின் ராஜசேதுபதி, உன் மாமாவை கூப்பிட்டு வருவது அவ்வளவு ஈஸி கிடையாது. சாமுண்டீஸ்வரி அதற்கு விட மாட்டார். அவளுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காது என்று கார்த்தியிடம் சொன்னார். அதன் பிறகு கார்த்திக், வீட்டிற்கு வந்தார். அங்கு அருண் மற்றும் ஆனந்த் காத்திருந்தார்கள். அதை பார்த்து கார்த்திக் ஆச்சரியப்படுகிறார். இன்னொரு பக்கம், சாமுண்டீஸ்வரியின் குடும்பம் காட்டப்படுகிறது. சாமுண்டேஸ்வரி மகள்களுடன் ஆடம்பரமாக வந்து இறங்கி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் அந்த வீட்டின் மூத்த மருமகனுக்கு மரியாதை இல்லை என்ற விஷயம் தெரிய வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ராஜா சேதுபதி, சாமுண்டேஸ்வரி குறித்து பயங்கர பில்டப்பாக பேசி இருக்கிறார். பின் சாமுண்டீஸ்வரிக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் முதல் மற்றும் இளைய மகள் அப்படியே அவருடைய அம்மா சாமுண்டேஸ்வரி போல் இருப்பார்கள். அவருடைய இரண்டாவது மகள் அவருடைய அம்மாவிற்கு எதிராக இருப்பார்.
சீரியல் ட்ராக்:
ஹீரோயினி என்ட்ரி. அவர் அன்பானவள், எல்லோரையும் பாசமாக பார்ப்பார். சாமுண்டீஸ்வரி குணத்திற்கும் அவருடைய குணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று பெருமையாக பேசுகிறார். இதை கேட்டு கார்த்திக், இப்போது தான் நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி அடுத்து என்ன நடக்க போகிறது? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.