-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை இப்படி ஒரு படத்தில் நடித்துள்ளாரா? என்ன படம் தெரியுமா?

0
969

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹீரோயினியாக சினிமாவில் களம் இறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகி ஹர்த்திகா புது முகம். இவர் கேரளாவை சேர்ந்தவர். கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்தார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு கால் பதித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை. திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரைக்கு வந்தார்.

ஹர்த்திகா குறித்த தகவல்:

தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக திரைப்படங்களில் தான் நடிக்க தொடங்கினார். தமிழில் கதாநாயகியாகவும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இவர் நடித்த படங்களில் ஒன்று தான் பிளாக் அண்ட் வொயிட். இந்த படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இதை அடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடிக்கிறார்கள்.

ஹர்த்திகா திருமணம்:

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியலில் ஹர்த்திகா நடிப்பதற்கு திருமதி செல்வம் நடிகை அபிதா தான் இவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பின் கடந்த ஆண்டு தான் நடிகை ஹர்த்திகாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் கேரளாவில் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இந்த நிலையில் ஹர்த்திகா ஹீரோயினியாக நடித்திருக்கும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஹர்த்திகா நடித்த படம்:

சமூகம் மற்றும் அரசியல் பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் வா பகண்டையா. இந்த படத்தை பி ஜெயக்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். ஒளி ரெவிலேஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தையும் அவரே தயாரித்து இருக்கிறார். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஜய தினேஷ் நடித்திருக்கிறார். ஹீரோயினாக கார்த்திகை தீபம் சீரியல் நடிகை கார்த்திகா நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் வில்லனாக அஜித் கோலி, மும்பை நடிகர் யோகிராம் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், படத்தில் ஆர் சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணா, நித்திஷ், வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டாமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்து இருக்கிறார். ஆரி ஆர் ஜே ராஜன் ஒளிப்பதிவு, சுரேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நடிகை ஹர்த்திகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news