-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

கார்த்திக்கு வில்லியாக வரும் சாமுண்டேஸ்வரி, இனி நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம்

0
139

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் கார்த்திகை தீபம் ஒன்று. கார்த்திக்-தீபா திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்தது. இருந்தாலுமே இவர்கள் இடையே இருந்த காதல் அதிகமானது. ஒரு கட்டத்தில் எதிரிகள் தீபாவை கொலை செய்ய முயன்றார்கள். இருந்தும் போராடி கார்த்திக் அவரை காப்பாற்ற பார்த்தார். ஆனால், தீபா இறந்து விடுகிறார். கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன் முதல் சீசன் முடிவுக்கு வந்தது.

-விளம்பரம்-

தற்போது புதிய கதைக்களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் தொடங்கி இருக்கிறது. நேற்று எபிசோடில், ஒரு ஊரில் பெரிய அரண்மனை வீடு இருந்தது. காலம் காலமாக இந்த ஊரில் கோவில் ஒன்று பூட்டப்பட்டு இருப்பதால் மழை இல்லாமல் ஊர் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்கள். இதனால் அந்த ஊரின் பெரிய மனுஷன் ராஜா சேதுபதியிடம் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோவிலை திறக்க வேண்டும் என்று முறையிட்டு இருந்தார்கள்.

கார்த்திகை தீபம்:

பின் எல்லோரும் கோவிலை திறக்க கோவில் அருகே திரண்டு இருந்தார்கள். அப்போது விருமன், உங்க இஷ்டத்துக்கு எப்படி கோவிலை திறக்க முடியும், மூட முடியும்? இது என்ன உங்க வீட்டு சொத்தா? என்று பிரச்சனை செய்தார். பின் சிலர், உங்க பையன் வந்தால் தான் கோவிலை முறையாக திறக்க முடியும் என்றார்கள். இதனால் ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் அங்கிருந்து கிளம்ப, உடனே அங்கு வந்த ஒருவன், பெரிய சம்பட்டி எடுத்து கோவில் பூட்டை அடித்து உடைத்து திறந்தார்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

எல்லோரும் ஷாக் ஆனார்கள். கடைசியில் அந்த கோவிலை திறந்தது கார்த்திக் தான் என்பது தெரிய வருகிறது. கார்த்திக்கின் என்ட்ரி செம மாஸாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கார்த்திக் கோவிலை திறந்தது சிவலிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றியது, உடனே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டார்கள். அதன் பின் ராஜசேதுபதி, உன் மாமாவை கூப்பிட்டு வருவது அவ்வளவு ஈஸி கிடையாது.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

சாமுண்டீஸ்வரி அதற்கு விட மாட்டார். அவளுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காது என்று கார்த்தியிடம் சொல்கிறார். அதன் பிறகு கார்த்திக், வீட்டிற்கு வந்தார். அங்கு அருண் மற்றும் ஆனந்த் காத்திருந்தார்கள். அதை பார்த்தும் கார்த்திக் ஆச்சரியப்படுகிறார். இன்னொரு பக்கம், சாமுண்டீஸ்வரியின் குடும்பம் காட்டப்படுகிறது. ராஜராஜன் சாதாரணமாக ஆட்டோவில் சாமுண்டேஸ்வரி மகள்களுடன் ஆடம்பரமாக வந்து இறங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

இதை வைத்து ராஜராஜனுக்கும் அந்த வீட்டின் மூத்த மருமகனுக்கும் மரியாதை இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது. அதை பின் சீரியலின் நாயகியின் திருவிழாவில் இருக்கிறார். அவரின் அறிமுக காட்சியும் நன்றாக இருக்கிறது. இனி அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திக் – சாமுண்டீஸ்வரி உறவு என்ன? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news