விஜய்னா டான்.! அஜித்னா காமெடி.! பிரபல ரஜினி பட இயக்குனரின் கருத்து.!

0
565
Vijay-ajith

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் என்ற தலைமுறைக்கு பிறகு அந்த இடத்தை பிடித்தவர்கள் வியாஜ்ஜிய – அஜித். ரசிகர்களை கொண்ட இவர்கள் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் ராஜாக்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரை பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.

குறும்பட இயக்குனராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதுவரை பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து படமெடுக்காத இவர் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார் .

- Advertisement -

இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் விஜய் மற்றும் அஜித் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்பதை சிபாரிசு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் நடிகர் விஜய் ஒரு டான் கேங்ஸ்டர் கதையிலும், அஜித் ஒரு முழு நீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்று கூறியுள்ளார். அஜித், பில்லா, பில்லா 2 போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அதே போல நடிகர் விஜய்யும் பிரண்ட்ஸ், மின்சார கண்ணா போன்ற பல முழு நீள காமெடி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அதே போல விஜய் பகவதி, வேட்டைக்காரன் போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்கள் விஜய்க்கு எடுபடவில்லை. அதே போன்று அஜித்திற்கு விஜய் போல காமெடி படங்கள் பெரிதாக கை கொடுத்தது இல்லை. ஒரு வேலை கார்த்திக் சுப்புராஜ் ஆசைபடி விஜய் பில்லா போன்ற ஒரு கேங்ஸ்டர் கதையிலும், அஜித் ‘பிரிண்ட்ஸ்’ போன்ற ஒரு காமெடி படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கு ஒரு வித்யாசமான விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Advertisement