ஹீரோயின் அழகு குறித்து விமர்சித்த செய்தியாளர் – கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த நச் பதிலடி.

0
400
Nimisha
- Advertisement -

நடிகை நிமிஷா சஜயனின் நிறத்தை கேலி செய்த பத்திரிக்கையாளருக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் மீடியாவுக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

பின் 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். அந்த பின் கடந்த ஆண்டு இவர் மகான் என்ற படத்தை இயக்கி இருந்தார். நடிகர் விக்ரம் மற்றும் துருவ் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. மேலும், நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்:

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா, நவீன் சந்திரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

நிமிஷா சஜயன் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிமிஷா சஜயன். இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘தொண்டி முதல் திருசாட்சியும்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழில் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சித்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

நிமிஷா சஜயன் நடிக்கும் படம்:

இதனை அடுத்து தற்போது இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் தமிழில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதிலடி:

அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் அழகா இல்லை என்றாலும் மாஸ்டருக்கு இணையாக நடித்திருக்கிறார். எப்படி அவர்களை இந்த படத்தில் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு கார்த்திக் சுப்புராஜ், நீங்கள் எப்படி அவர் அழகா இல்லை என்று சொல்லலாம். எதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள். அழகு என்றால் இப்படித்தான் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் போல அதை வைத்து தான் சொல்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கார். தற்போது இதை வைத்துதான் ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement