டேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார். ரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார்.
டேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார். அங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து 15 நாள்கள் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி, சிம்ரன், பாபிசிம்ஹா இடம்பெறும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் திரு படம் பிடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.




