ரஜினிக்கு ஜோடி இவரா..? 90 கலக்கிய முன்னணி நடிகை.! புகைப்படம் இதோ

By Ajju · 18/7/2018
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பெயர் வைக்கப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, டார்ஜிலிங்கில் நடந்து முடிந்தது. கடந்த 16-ம் தேதி டெல்லி சென்ற ரஜினி , அங்கிருந்து 17-ம் தேதி டேராடூன் சென்றடைந்தார். கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். டேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார். ரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார். டேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார். அங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இன்று முதல் தொடர்ந்து 15 நாள்கள் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி, சிம்ரன், பாபிசிம்ஹா இடம்பெறும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் திரு படம் பிடிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full