ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், எந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ அந்த அளவு சர்ச்சைகளில் சிக்கியது. இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக பல வன்னிய அமைப்புகள் இந்த படத்தை எதிர்த்தனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் காலண்டர் ஒன்றில் இடம்பெற்ற அக்னி கலச புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் பல வன்னிய சமூகத்தினரை புண்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து இருந்தார்கள்.

அந்த வகையில் ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருணாஸ் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக பேசிட்டு அசுரன் படத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், அசுரன் படத்தில் ஆண்ட ஜாதி என்ற ஒரு வார்த்தை வந்தது. படம் ரிலீஸான பிறகு திருநெல்வேலியில் இருந்து ஒரு தியேட்டர் ஓனர் எனக்கு போன் பண்ணி இது நல்ல படம். ஆனால், அதுல ஒரு காட்சியில் ஒரு டயலாக் வருகிறது.

Advertisement

கருணாஸ் அசுரனுக்கு ஆதரவு கொடுக்காத காரணம்:

அதை கேட்டவுடன் எல்லோருமே திட்டிக்கொண்டு வெளியில் போய் விட்டார்கள் என்று சொன்னார். உடனே இயக்குனரிடம் நான் இதைச் சொன்னேன். எனக்கு ஒரு நல்ல படம், தரமான படம்.ஆனால், ஒரு டயலாக் அந்த படத்தை மக்கள் மத்தியில் விமர்சிப்பது தேவையா? நீங்கள் யோசித்துப் பாருங்கள் என்று நான் சொன்னேன். உடனே இயக்குனரும் அறிக்கை போடுவதற்கு முன்னே அதை எடுத்துவிட்டார். அதே மாதிரிதான் ஜெய்பீம் படத்திலும் ஒரு கருத்தை முன்வைக்கும்போது அது சம்பந்தப்பட்ட பட குழுவினர்கள் நீக்கி விட்டார்கள்.

கருணாஸ் ஜெய் பீம் படத்துக்கு ஆதரவு கொடுத்த காரணம்:

அசுரன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால், ஜெய் பீம் படம் ஓடிடியில் ரிலீசானது. இதிலேயே போய் மாற்றுகிறார்கள். அந்த அளவுக்கு மக்களுக்கு மதிப்பளித்து மாற்றினார்கள். எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால், சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பேன் என்று அவமரியாதை பேசி இருந்தார்கள். ஒரு கலைஞனாக, நடிகனாக, ஒரு நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது மிகவும் தவறான ஒன்று.

Advertisement

கருணாஸ் திரை பயணம்:

அதனால் தான் இதுபோன்ற கருத்துக்கள் தவறு என்று சொல்லி நான் நின்றேன் என்று கூறியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார்.

Advertisement

கருணாஸ் நடிக்கும் படங்கள்:

பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது கருணாஸ், இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்கும் ‘ஆதார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். பின் கார்த்தி நடித்து வரும் விருமன் என்ற படத்திலும், சசிகுமாருடன் ஒரு படத்திலும் கருணாஸ் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

Advertisement