ஹிந்தி திரையுலகில் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரபல நடிகை ஸ்வேதா பாசு. இவர் ‘கொத்த பங்காரு லோகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதில் ஹீரோவாக வருண் சந்தேஷ் நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்த ஸ்வேதா பாசு, ‘ஏக் நடிர் கல்போ : டேல் ஆஃப் எ ரிவர்’ என்ற பெங்காலி படத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழி படங்களுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஸ்வேதா பாசு, தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘ரா ரா’. இது தான் நடிகை ஸ்வேதா பாசு தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம்.

Advertisement

இதில் ஹீரோவாக உதயா நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சாண்டில்யா இயக்கியிருந்தார். ‘ரா ரா’ படத்துக்கு பிறகு தமிழில் ‘மை, சந்தமாமா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் ஸ்வேதா பாசு. திரைப்படங்கள் மட்டுமின்றி சில ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார் ஸ்வேதா பாசு.

2018-ஆம் ஆண்டு ஹிந்தி பட இயக்குநர் ரோஹித் மிட்டல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்வேதா பாசு. அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்வேதா பாசு தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் வீட்டிலையே தனிமையில் இருந்து வந்திருக்கிறார்.

Advertisement

ஆகையால், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு ஒரு மனநல மருத்துவரிடம் வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக நடிகை ஸ்வேதா பாசு பேசுகையில் “எனது வாழ்க்கையில் நான் இதுவரை தனிமையில் இருந்ததே இல்லை. விவாகரத்து ஆனதுக்கு பிறகே தனியாக இருக்கிறேன். இப்போது மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டேன்.

Advertisement

அந்த மருத்துவர் இந்த லாக் டவுன் டைமில் என்னை போல் பலரும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக கூறினார். சில நாட்களுக்கு முன்பு,எனது அம்மா என்னை பார்ப்பதற்காக நேரில் வந்திருந்தார். இந்த கொரோனா வால் என் அம்மாவை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை, தள்ளி நின்று தான் அவரிடம் பேசினேன். கூடிய விரைவில் இந்த கொரோனா பிரச்சனை முடிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று ஸ்வேதா பாசு தெரிவித்தார்.

Advertisement