காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை.! பிக் பாஸ் போட்டியாளரை வறுத்தெடுத்த கஸ்தூரி.!

0
2681
Kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவில் 96 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி தற்போது சர்ச்சைக்கும் பரபரப்பிற்கும் மிகவும் பெயர்போனவர் ஆக இருந்து வருகிறார் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி , கவினை பங்கமாக கலாய்த்துள்ளார.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் திருமணம் பற்றி எல்லாம் பேசி இருந்தார். ஆனால், தற்போது தனது முழு கவனத்தையும் லாஸ்லியாவிடம் தான் திருப்பியுள்ளார். இதனால் எப்போதும் லாஸ்லியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலேயே இருக்க பல சேட்டைகளை செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : எவ்ளோ பெரிய வார்த்தை சொல்லிட.! இரவில் கண்கலங்கி அழும் கவின்.!

- Advertisement -

ஆனால், கடந்த சில நாடளுக்கு முன்னர் லாஸ்லியா, கவினிடம் எனக்கு உன் மீது காதல் எல்லாம் கிடையாது என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார். இதனால் மீண்டும் கவின், சாக்க்ஷியிடம் நெருக்கமாக பேசத் துவங்கிவிட்டார். என்னதான் கவின், இதை எல்லாம் நான் வெறும் ஜாலிக்காக செய்கிறேன் என்று சொன்னாலும் பார்ப்பவர்களுக்கு அவர் பெண்களிடம் வழிவது போல தான் தெரிகிறது.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாக்க்ஷி இருவருக்கும் ஏதோ காதல் இருப்பது போல பில்ட்டப் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கவின் மற்றும் சாக்க்ஷி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, கவின் சம்பத்தப்பட்ட காட்சிகளில் காதலும் இல்லை, கத்தரிக்காயுமில்லை. நட்போ நல்ல எண்ணமோ கூட இல்லை. தான் நாமினேட் ஆகிவிடக்கூடாது என்ற உஷார் மட்டுமே வெளிப்படுகிறது. இது உண்மையா நாடகமா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement