அரைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி.! இந்த வயசுல இது தேவையா.!

0
1796
kasthuri

தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது கஸ்தூரி தான்.

Related image

கஸ்தூரிக்கு தற்போது 44 வயது நிலையிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு பிரச்னையிலும் சிக்கி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி, சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. தற்போது விஜய் ஆன்டனியுடன் ‘தமிழரசன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார்.

கடந்த சில மாதத்திற்கு முன்னர் குழந்தையுடன் அரை நிர்வாண போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அரை குறை ஆடையில் மழையில் நனைந்தபடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

இதனை கண்ட ரசிகர்கள் கண்ட மேனிக்கு கமன்ட் செய்து வருகின்றனர். கஸ்தூரிக்கு திருமணம் முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.