கவினை கழுவி ஊற்றிய பிரபல நடிகை.! இவருக்கு இப்போவாவது ஓரைக்குமா.!

0
6224
Kavin
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் கவின் தான் தற்போது ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் மீது காதல் கொண்டிருப்பதை கவினிடம் நேரடியாகவே கூறி இருந்தார் அபிராமி. ஆனால், கவினோ நாம் இருவரும் நண்பர்களாக பழகி கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதேபோல அபிராமியிடம் மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா ஆகிய அனைவரிடமும் கவின் ஜொள்ளு விட்டுக் கொண்டுதான் வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் பெண்களிடம் நடந்து வரும் விதம் பலரையும் எரிச்சலடைய வைத்து வருகிறது நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண்களை போல வேடம் அணைந்து செய்த சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தது.

- Advertisement -

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தர்ஷன் செய்த காமெடி அனைவரையும் ரசிக்க வைத்து. ஆனால், கவின் செய்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியில் கவின், மற்ற போட்டியாளர்களை விட மிகவும் மோசமாக பெண்கள் அணியும் உடையை அணிந்திருந்தார்.

அவர் அணிந்திருந்த ஆடை ஷெரினுடையது என்பது பின்னர் தான் தெரிய வந்தது. இந்த நிலையில் பிரபல நடிகையான கஸ்தூரி கவின் அணிந்த ஆடை குறித்து பங்கமாக ட்விட்டரில் கமன்ட் செய்துள்ளார். அதில் ஷெரீனை விட கவின் தான் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement