ஒரு ஜீரோவ காணும்.! காலம் மாறிடிச்சி.! ரஜினியை பங்கமாக கலாய்த்த பிரபல நடிகை.!

0
857
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் ரஜினியை கலாய்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை கஸ்தூரி. கமல், பிரபு, விஜயகாந்த்,சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கஸ்தூரிக்கு ரஜினியுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் வந்த கஸ்தூரி ‘தமிழ் படம்’ மூலம் ஐட்டம் டான்சராக ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும், அடிக்கடி சமூக வலைதளத்தில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொள்கிறார் கஸ்தூரி.

அந்த வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்களை வம்பிழுக்கும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் பேட்ட படத்தின் 10 வது நாள் போஸ்ட்டரை பதிவிட்டு காலம் மாறி போச்சு அப்போதெல்லாம் ரஜினி படத்துக்கு 100 நாள் ஓடினது குறித்து போஸ்டர் ஓட்டுவாங்க. ஆனால் இப்போ ஒரு ஜீரோவை காணும் என கூறி கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement