வறுத்தெடுத்த ரசிகர்கள்..!நான் எப்போ விஜய்யை கிண்டல் செய்தேன்..!அந்தர் பல்டி அடித்த நடிகை கஸ்தூரி..!

By Rajkumar · 23/12/2018

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்துவிட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

தற்போது விஜய் ரசிகர்களை சீண்டி மாட்டிக்கொண்டு அவதிபட்டு வருகிறார். சமீத்தில் நடிகர் விஜய் சர்கார் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாகவும் ஊடக நபர்களை சந்த்தித்தார்.

இதையும் படியுங்க :

இதையும் படியுங்க : பிரஸ் மீட் வைத்து விஜய் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு..!விஜயை கிண்டல் செய்த கஸ்தூரி..!

மேலும் இந்த சந்திப்பின் போது அணைத்து ஊடக நபர்களுக்கு நடிகர் விஜய் தனது ஆட்டோகிராப் அடங்கிய புகைப்படத்துடன் ஒரு தங்க நாணயத்தயும் பரிசளித்தார். இதனை விமர்சித்து நடிகை கஸ்தூரி போட்ட ட்வீட் விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக இருந்தது என்று ரசிகர்கள் கோபம் கொண்டனர்.

https://twitter.com/KasthuriShankar/status/1076497338351312896

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தான் விஜயை கிண்டல் செய்யவில்லை என்றும் சில சமூக ஊடகங்கள் வேடணுமென்று தவறான செய்தியை பரப்புகின்றனர் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இருப்பினும் இதனை விஜய் ரசிகர்கள் ஏற்பதாக இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full