தமிழ் பொண்ணு vs லூசு பொண்ணு.! நேற்றைய ஷோவை பங்கம் செய்த கஸ்தூரி.!

0
6248
kasturi
- Advertisement -

தமிழ் சினிமாவில் 96 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி தற்போது சர்ச்சைக்கும் பரபரப்பிற்கும் மிகவும் பெயர்போனவர் ஆக இருந்து வருகிறார் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ட்விட்டரில் பங்கமாக கலாய்த்துள்ளார்

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sakshi-1024x575.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டைகள், சர்ச்சைகள் என்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பொம்மைக்காக ஆரம்பித்த சண்டை கலாச்சாரம் பேசும் அளவிற்கு போய்விட்டது. மதுமிதா தன்னை ஒரு தமிழ் பெண் என்று அங்கீகாரம் செய்து கொள்ள, உடனே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதா பக்கம் திரும்பினார்.

- Advertisement -

ஆரம்பத்தில் இந்த சண்டை அபிராமிக்கு மதுமிதாவிற்கு மட்டும் தான் துவங்கியது. அதன் பின்னர் அணைத்து பெண் போட்டியாளர்களும் (லாஸ்லியாவை தவிர) மதுமிதா பக்கம் திரும்பி ஒரே ரகளை செய்து விட்டனர். நேற்று நடைபெற்ற இந்த சண்டையை குறிப்பிட்டு கஸ்தூரி ஒரு ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், லூசு பொண்ணு Vs தமிழ் பொண்ணு, எங்க ஊருல தண்ணியே இல்லை, அதனால குழாயடில ஆளே இல்லை, குழாயடி சண்டையும் பாக்கமுடியறது இல்லை… அந்த குறையை போக்க வந்த பிக் பாஸுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கஸ்தூரி கலாய்ப்பது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, இது மட்டுமல்லாமல் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன ஆனால், கடந்த ஆண்டு பிக்பாஸ் அதைவிட தனது வீட்டில் உள்ள சின்ன பாஸ் (அவரதுபிள்ளை )தான் முக்கியம் என்று பதில் கூறிவிட்டார் கஸ்தூரி.

அதே போல இந்த ஆண்டும் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர் ஆனால் இம்முறையும் அவர் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement