காலை மேல் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது.! அதிலும் லாஸ்லியா தான் ஒர்ஸ்ட்.!

By Rajkumar · 25/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் மட்டுமல்ல சில சினிமா பிரபலங்களும் மிகவும் தீவிரமாக பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக தொடர்ந்து வரும் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டு பிக் பாஸ் துவங்கும் போதும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொல்லப்போகிறார் என்று செய்திகளும் பரவியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை உள்ள போட்டியாளர்களை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் காஸ்தூரி.

இதையும் பாருங்க : விசாரணை நடத்த பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போலீஸ்.! வெளியேற்றப்படுவாரா மீரா.! 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் ரேஸ்மா இயக்குனர் சேரனிடம் கொஞ்சம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். அதே போல மதுமிதாவுக்கு சாண்டியை அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருந்தார்.

https://twitter.com/KasthuriShankar/status/1154278032716247040

இதனால் ரேஷ்மா மற்றும் மதுமிதாவின் செயலை விமர்சித்துள்ள கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ' பிறந்தநாள் அன்று வயது கூடினால் போதுமா? வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியும் பண்பும் கூடவேண்டாமா ? டாஸ்கை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை, வயதில் மூத்தவரிடம் மரியாதையாக பேசவும் முயலவில்லை... கால் மேல் கால் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது birthday baby! ' என்றும்.

மற்றொரு டீவீட்டில் ' ஒரு சாதனை இயக்குனர், சாரியெல்லாம் கேட்கிறார். டிவியில் பார்க்கும் நமக்கே சகிக்கவில்லை.ஆனால் நேரில் இதை பார்த்துக்கொண்டு மற்றவர்கள் ஊமையாக இருக்கிறார்கள். சேரன் சிறுமைப்படும் டாஸ்கை கொடுத்து ரசித்த மதுமிதா தனக்கு வலித்தபோது சாமியாடியது total தக்காளி சட்னி ' என்றும் பதிவிட்டுள்ளார். மற்றுமொரு டீவீட்டில் இந்த கேவலத்தை பார்த்து சிரிக்கும் லாஸ்லியா தான் மோசமானவர். என்றும் கூறியுள்ளார் கஸ்தூரி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full