விசாரணை நடத்த பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போலீஸ்.! வெளியேற்றப்படுவாரா மீரா.!

0
3143
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா சென்ற பிறகு மீரா தான் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகிறார். வனிதா இருந்த போது மகளை கடத்தியது சம்பந்தமாக வனிதாவின் இரண்டாவது கணவர் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
meera

இந்த நிலையில் மீராவை விசாரிக்க இன்று (ஜூலை 25) போலீசார் பிக் பாஸ் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். மாடல் அழகியான நிருபா என்ற பெண் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமாக 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பல்வேறு நபர்களிடம் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்திவரும் மிஸ் தமிழ்நாடு அமைப்பின் லோகோவை கூட இவர் தவறுதலாக பயன்படுத்தி மாடல்களை தேர்வு செய்து வந்ததாகவும் அதன் மூலம் பல்லாயிரக் கணக்கில் பணம் பறித்ததாகவும் நிருபா தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : செயலிழந்த கிட்னி.! ராணாவிற்கு கிட்னியை தானம் செய்த பெண் யார் தெரியுமா.! 

- Advertisement -

அதே போல பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தந்த புகாரில் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் மீரா மிதுன் ஜூலை 19 ஆம் தேதி ஆஜராகும்படி சென்னை தேனாம்பேட்டை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது பிக் பாஸில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாக மீரா மிதுன் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.

Meera-Mithun

இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் பிணையுடன் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. மேலும், தேவைப்பட்டால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவும் மீரா மிதுனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீராவை விசாரிக்க எழும்பூர் போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கு முன்பாக வனிதாவை விசாரிக்க பிக் பாஸ் வீட்டிற்குள் போலீஸ் சென்றிருந்தனர். அவருக்கு விசாரணை நடைபெற்ற அடுத்த வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதே போல இந்த வாரம் மீரா நாமினேஷனில் இருப்பதால் வனிதாவை போல மீராவும் வெளியேற்றப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement