கமலை பற்றி மிகவும் கொச்சையாக விமர்சித்த கஸ்தூரி..!வறுத்தெடுத்த ரஜினி ரசிகர்கள்..!

0
947
kasturi

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல நடிகர்களை பற்றி பல சர்ச்சையான பதிவகளை செய்து ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சமீபத்தில் அஜித் மற்றும் விஜய்யை பற்றி கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நடிகை கஸ்தூரி அவர்களது ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது நடிகர் கமல் பற்றி மிக மோசமாக பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

- Advertisement -

கடந்த சில தனின்களுக்கு முன்னர் நடிகர் கமல் ஒரு ஹிந்தி தொலைக்காட்சியில் விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அந்த விவாதத்தில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியும் பங்குபெற்றார். மிகவும் சூடாக நாணத்தை இந்த விவாதத்தில் தொகுப்பாளர் கூட கமலுக்கு எதிராகவே பேசி இருந்தார்.

மேலும், இந்த விவாதத்தில் நடிகர் கமல் மிகவும் திணறினார் என்று ஊடகங்களும் செய்திகள் பரப்பியது. இந்நிலையில் நடிகர் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த பேட்டியில் கமலை ஸ்மிரிதி இராணி நன்றாக கற்பழித்துவிட்டார் என்று படு மோசமாக பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த பதிவு கமல் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் கஸ்தூரியை வழக்கம் போல வறுத்தெடுத்து வந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரஜினி ரசிகர்களும் கமலை பற்றி பேசியதற்கு ஆதாரவாக நடிகை கஸ்தூரியை திட்டி தீர்த்து வருகின்றனர். எங்கள் தலைவரின் நண்பருக்கு எதாவது ஒன்னுனா நாங்க கேட்போம் என்று ரஜினி ரசிகர்களும் குரல் கொடுத்துள்ளனர்.

Advertisement