மைனா கதை சொன்ன லாஸ்லியா.! மனநலம் பாதிக்கப்பட்டவருடன் ஒப்பிட்டு கஸ்தூரி போட்ட ட்வீட்.!!

By Rajkumar · 14/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல இளசுகளின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருபவர் லாஸ்லியா மட்டும் தான். ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : வடசென்னை 2 முன்பாக ‘ராஜன் வகைரா’.! வெற்றி மாறன் கொடுத்த செம சர்ப்ரைஸ்.!

அதே போல லாஸ்லியா மிகவும் சேபாக விளையாடி வருகிறார் என்றும் ஒரு விமர்சனமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா மற்றும் தர்ஷனுக்கு இடையே நடந்த வாக்குவாதம் குறித்து கமல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சம்மந்தமே இல்லாமல் லாஸ்லியாவை மைனா கதை சொல்லுமாறு சொன்னார் கமல்.

https://twitter.com/KasthuriShankar/status/1150331437591257088

கமல் சொன்னதால் லாஸ்லியாவும் அந்த கதையை சொல்லத் துவங்கினர். உண்மையில் அவர் ஏன் அந்த கதையை சொன்னார், அந்த கதை மூலம் நமக்கு என்ன புரிந்தது என்று ஒன்றும் புரியாமல் தான் இருந்தது. இந்த நிலையில் லாஸ்லியாவை பேச வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கதையை சொல்ல வைத்தனர் என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, Content கொடுக்காத பேசாமடந்தை லாஸ்லியாவை கட்டாயப்படுத்தி மைனா கதை சொல்லவைப்பதெல்லாம் பிக் பாஸின் பரிதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதற்கு கீழ் அஞ்சலி திரைப்படத்தில் வரும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தயின் ஒரு மீமையும் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

behindtalkies AMP · Quick view
View full