வடசென்னை 2 முன்பாக ‘ராஜன் வகைரா’.! வெற்றி மாறன் கொடுத்த செம சர்ப்ரைஸ்.!

0
3351
vetrimaran

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை தனுஷ் நடித்துள்ள “வடசென்னை” திரைப்படம் கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் வெளியாகி இருந்தது. பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்தது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ. 

ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்போடு வெளியாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதையை வெற்றி மாறன் 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுத தொடங்கி இருந்தார். மேலும் , வடசென்னை படம் நிறைவடைந்த போதே இந்த படத்தின் 2 ஆம் பாதியை பாதி முடித்து வைத்திருந்தார் வெற்றி மாறன்.

மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்து வரும் நிலையில், இந்த படம் குறித்து பேசியுள்ள வெற்றிமாறன், வட சென்னை படம் வருவதற்கு முன்னபாக ‘ராஜன் வகைரா’ என்ற தொடரை எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். அதில் ராஜன் கதாபாத்திரம் எப்படி ஒரு கோட்டையை உருவாக்கினார் என்பதை படமாக்க திட்டமிட்டுள்ளோம். அதனை வெப் சீரியஸாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Related image

வடசென்னை படத்தின் முதல் பாகத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபத்திரம் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில் ராஜன் எப்படி உருவானார் என்ற வெப் சீரிஸ் வந்தால் அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.