டைரக்டர் சாப்ட்டதுக்கு அப்புறம் தான் எல்லாரும் சாப்பிடனுமாம் – கேள்வி கேட்டதற்கு என்ன தூக்கிட்டாங்க . புலம்பிய கயல் சீரியல் நடிகர்

0
547
Kayal
- Advertisement -

கயல் சீரியலில் திடீரென்று பிரபல நடிகரை மாற்றம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு கயல் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரின் நண்பர் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. கயல் ரோலில் சைத்ராவும், எழில் ரோலில் சஞ்சீவ் நடிக்கிறார்கள். அதோடு சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது. மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இருந்து பிரபல நடிகர் பிர்லா போஸை மாற்றம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

கயல் பிர்லா போஸ்:

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் பிர்லா போஸ். இவர் பல வருடங்களாக சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார். இவர் கயல் தொடரில் வஜ்ரவேல் என்ற போலீஸ் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கயல் சீரியலில் இருந்து விலகி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பிர்லா போஸ் பேட்டியில், 20 வருடத்திற்கு மேலாக நான் டிவியில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பிர்லா போஸ் பேட்டி:

சன் டிவி பொருத்தவரைக்கும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சேனலில் ஒரு தடவைக்கு நாலு தடவை பேசி தான் ஆர்ட்டிஸ்ட்டை முடிவு செய்வார்கள். அப்படித்தான் கயல் சீரியலில் வஜ்ரவேல் கதாபாத்திரத்திற்கும் நான் செலக்ட் ஆனேன். வஜ்ரவேல் கதாபாத்திரத்திற்கு பிறகு சீரியல் ரேட்டிங்க் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை கமிட் செய்திருக்கிறார்கள். பொதுவாகவே ஷூட்டிங்கில் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாத ஆள் நான். ஒருவேளை நான் பிரச்சனை செய்திருந்தால் தொடர்ந்து இந்த பீல்டில் என்னால் இருக்க முடியுமா? கயல் சீரியலில் என்ன பிரச்சனை என்றால், ஒரு நாள் எனக்கு ஒரு படத்தின் சூட்டிங் வந்தது.

-விளம்பரம்-

திரைஅனுபம் குறித்து சொன்னது:

சீரியல் யூனிட்டில் முறைப்படி சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு தான் போனேன். அங்க போன இடத்தில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அதை சரி செய்ய மறுநாள் சீரியலுக்கு தனியாக நேரம் ஒதுக்கி ஃப்ரீயாகவே நடித்துக் கொடுத்தேன். அதை ஏற்றுக் கொண்டதா என்னிடம் சொன்னார்கள். ஆனால், பின்னாடி அதையே பிரச்சினையாகி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் என் மீது புகார் தந்திருந்தார்கள். சங்கத்தில் நானும் கமிட்டி மெம்பர். சங்கத்தைப் பொருத்தவரைக்கும் எந்த ஒரு புகாரும் எழுத்துப்பூர்வமாக தந்தால் மட்டுமே தலையிடுவாங்க. ஆனால், இவங்க எழுத்துப்பூர்வமாக புகார் தரவில்லை.

சீரியலில் விலகிய காரணம்:

காரணம் எழுத்துப்பூர்வமாக தந்தால் அந்த புகார் நிக்காது என்று அவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் எழுத்துப்பூர்வமாக புகார் தரவில்லை. புகார் தந்த பிறகு என்னை சூட்டிங் கூப்பிடவே இல்லை. நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். திடீரென்று பார்த்தால் என்னுடைய கதாபாத்திரத்தில் இன்னொரு ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்து விட்டார்கள். எனக்கு சம்பளம் பாக்கி இருக்கிறது. இதுவரை எங்கேயும் இந்த மாதிரி நான் ஒரு பிரச்சனையை சந்தித்ததே இல்லை. தயாரிப்பு தரப்பிடமோ, சேனல் மீதும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இயக்குனர் தான் கேம் ஆடி இருக்கிறார். அதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. என் மீது என்ன கோபம் என்று அவரை தான் கேக்கணும். எந்த கோபமானாலும் என்னிடம் கூப்பிட்டு பேசி இருக்கலாம். அதை விட்டுட்டு எனக்கே தெரியாமல் என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை போட்டது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement