என்ன பாக்குறீங்க, இது தான் சன் டிவி தனுஷ் – நித்யா மேனன். ‘மேகம் கருக்காதா’ பாடலை கண்டம் பண்ண சஞ்சீவ்.

0
671
dhanush
- Advertisement -

கயல் சீரியலின் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. மேலும், சன் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும், சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.

- Advertisement -

கயல் சீரியல்:

கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. தற்போது சன் டிவி சீரியலில் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் இருக்கிறது. தற்போது சீரியலில் கயலின் தங்கை மாமியார் பேச்சை கேட்டு கயலுக்கு எதிராகவே திரும்பினார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கயலின் மாமா எப்படியாவது கயல் போட்ட சவாலில் வெற்றி பெறக் கூடாது என்று முயற்சி செய்கிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

இன்னொரு பக்கம் கயல் வேலை செய்யும் இடத்தில் அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் கயல் எப்படி தைரியமாக எதிர்த்துப் போராடுகிறார் என்பதே சீரியலின் சுவாரசியம். இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர்.

சீரியல் ப்ரோமோ:

கயல் சீரியலின் மூலம் சைத்ரா ரெட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சஞ்சீவ் நடித்த சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் கயல் சீரியலின் புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

கேலி செய்யும் ரசிகர்கள்:

அதில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காத பாடல் ரசிகர் மனதில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பாடலை தான் தற்போது கயல் சீரியலில் ப்ரோமோவாக வெளியாகிறது. தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement