ஓபன் கோட்டில் கிளாமர் போஸ் – கீர்த்தி சுரேஷ்ஷா இப்படி ? இன்ஸ்டா புகைப்படங்களை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்.

0
428
keerthi
- Advertisement -

முதன் முறையாக கிளாமர் லுக்கில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருக்கும் போட்டோ ஷூட்டை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கின்றனர். தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், லீட் ரோலிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

- Advertisement -

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம்.இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி, வினோத் முன்னா உட்பட பலர் நடிக்க பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி இருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.இந்த தமிழில் சூப்பர் ஹிட் பெற்ற அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘போலோ சங்கர்’ என்று பெயர். பப்லியாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

பாலிவுட் வாய்ப்பை நம்பி உடல் எடையை குறைத்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அதிக உடல் எடையை குறைத்ததாலேயே இவருக்கு பாலிவுட் வாய்ப்பு பரி போனது. கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன சிம்ரன் இது என்ற அளவுக்கு வாயடைத்து போய் இருகின்றனர்.

Advertisement