ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்- நயன்தாராவை மிஞ்சிய மேகா ஆகாஷ், அனுபமா. முதல் இடம் யார் தெரியுமா ?

0
1512
onam
- Advertisement -

கொரோனா பிரச்சனையில் மக்கள் கொஞ்சம் அவதிப்பட்டு வந்தாலும் தங்களின் துயர் தீர்க்க தங்களை காண வரும் மகாபலிக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாளில் அளிக்கும் வரவேற்பை இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி விருந்து படைத்து வரவேற்பு கொடுத்து வந்தனர் மலையாள மக்கள். மலையாள மக்களை தவிர மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான்.

-விளம்பரம்-

ஓணம் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஓணம் புடவை தான். ஓணம் பண்டிகை வந்தாலே பல்வேறு பெண்களும் ஓணம் புடவையை கட்டிக்கொண்டு புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். சமீபத்தில் சென்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

மேலும், ஓணம் புடவையை கட்டிக்கொண்டு அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வந்தனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்று இருந்தார். நயனை தவிர மற்ற நடிகைகள் கூட ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அதிலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான திரிஷா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், மேகா ஆகாஷ், கல்யாணி பிரியதர்ஷன், மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா மேனன், பார்வதி என்று பல்வேறு நடிகைகளும் ஓணம் புடவையில் இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். ஆனால் நடிகைகள் பதிவிட்ட ஓணம் புகைப்படத்திற்த்தில் அதிக லைக்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருப்பது பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தான்.

-விளம்பரம்-

10. பார்வதி – 1,50,000 லைக்ஸ்

9. ஐஸ்வர்யா மேனன் – 1,95,000 லைக்ஸ்

8. மாளவிகா மோகனன் – 2,32,000 லைக்ஸ்

7. திரிஷா – 2,66,000 லைக்ஸ்

6.கல்யாணி பிரியதர்ஷன் – 2,86,000 லைக்ஸ்

5. நயன்தாரா – 2,99,000 லைக்ஸ்

4. மடோனா சபாஷ்டீன் – 3,34,000 லைக்ஸ்

3. மெகா ஆகாஷ் – 3,39 லைக்ஸ்

2.அனுபமா பரமேஸ்வரன் – 6,50,000 லைக்ஸ

1. கீர்த்தி சுரேஷ் – 8,20,000லைக்ஸ்

Advertisement