விக்கிபீடியால இருப்பது கீர்த்தி சுரேஷின் உண்மையான பெயர் இல்லையாம். இது தான் அவருடைய உண்மையான செல்லப் பெயராம்.

0
1247
keerthi-suresh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பாலா படத்திற்காக 105 கிலோவை ஏற்றிய ஆர் கே சுரேஷ். இப்போ 22 கிலோவை குறைத்திருக்கார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் செல்லப்பெயர். அதாவது பெட் நேம் என்று கூகுள் விக்கிபீடியாவில் இருப்பது பொய்யான பெயர் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.விக்கிபீடியாவில் இருக்கும் கீர்த்தனா என்பது கீர்த்தி சுரேஷின் செல்லப்பெயர் இல்லை என்றும் அவரது உண்மையான பெயர் கிட்டி,காயு என்று பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவை பார்த்து கீர்த்தி சுரேஷும் சிரித்தபடி ரியாக்ட் செய்துள்ளார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்’ படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் – தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement