-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

யோகா மூலம் உடல் எடை குறைத்த கீர்த்தி சுரேஷின் அக்கா – எப்படி இருந்துள்ளார் பாருங்க

0
504

தங்கையை தொடர்ந்து கடுமையாக யோகா மூலம் கீர்த்தி சுரேஷின் அக்கா உடல் எடையை குறைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

-விளம்பரம்-

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வைகை புயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து தெலுங்கு மொழி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

-விளம்பரம்-

கீர்த்தி சுரேஷின் அக்கா:

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்கா உடல் எடையை குறைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே நடிகர்கள் பலரும் தங்களுடைய உடல் எடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒல்லியாக இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை கையாளுகிறார்கள். அந்த வகையில் கீர்த்தி சுரேஷும் கடந்த ஆண்டு கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து இருந்தார்.

வைரலாகும் புகைப்படம்:

தற்போது இந்த முயற்சியில் கீர்த்தி சுரேஷின் அக்கா இணைந்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ். இவர் பார்ப்பதற்கு கொஞ்சம் உடல் எடை கூடி குண்டாக இருந்தார். இதனால் இவர் 2021 ஆம் ஆண்டு யோக மூலம் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news