தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார்.

தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் தேவர் கொண்டவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா. இந்த படம் இந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:
இந்த நிலையில் விஜய்-சிரஞ்சீவி டான்ஸ் தொடர்பாக கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே நடித்த ஒரு தெலுங்கு படத்தின் ப்ரோமோஷனின் போது டான்ஸ் தொடர்பாக சில நடிகர்களின் பெயர்களை சொல்லி கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ், விஜய் தான் சூப்பராக டான்ஸ் ஆடுவார். எனக்கு அவருடைய நடனம் தான் ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார். சிரஞ்சீவி உடன் ஒப்பிட்டு இந்த கேள்வி கேட்டதால் சிரஞ்சீவி ரசிகர்கள் பயங்கரமாக கொந்தளித்து கீர்த்தி சுரேஷை ட்ரோல் செய்திருந்தார்கள்.

விஜய்-சிரஞ்சீவி டான்ஸ்:
68 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு நிகராக கடுமையான ஸ்டேப் போட்டு அசால்ட்டாக நடனமாடியவர் சிரஞ்சீவி. அவரைவிட விஜய் எந்த விதத்திலும் சிறந்தவர் கிடையாது என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோஷனின்போது இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு கீர்த்தி சுரேஷ், யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதை பற்றி இது கிடையாது. நான் விஜய்க்கு எந்த அளவு ரசிகை என்பது சிரஞ்சீவி சாருக்கே தெரியும். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் பணிபுரிவதை நான் நேசிக்கிறேன். அவரை நான் ரொம்பவே மதிக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=0SGaUEXUYVQ
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
நானும் சிரஞ்சீவி சாரும் பேசிக் கொண்டிருக்கும்போதே வேடிக்கையாக சில விஷயங்கள் பேசி இருந்தோம். அப்போது நான், விஜய் சாரோட டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். அதை அவர் எதார்த்தமாகத்தான் எடுத்துக் கொண்டார். நான் எந்த நடிகர்களையும் ஒப்பிட்டு சொல்லவில்லை. எதார்த்தமாக என் மனதில் தோன்றியதை சொன்னேன். ஆனால், அதை வேறு விதமாக மாற்றப்பட்டது. இருந்தாலுமே சிரஞ்சீவி ரசிகர்களுக்கு இது கஷ்டத்தை கொடுத்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிரஞ்சீவி சார் நம் நாட்டின் மிக சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். என் மனதில் பட்ட கருத்தை தான் சொன்னேன். அதை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்






