'ரகு தாத்தா' படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரகு தாத்தா. இந்த படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிசை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கே ஜி எஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
ரகு தாத்தா படம்:
தமிழில் இதுதான் இவர்களுடைய முதல் படம். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர். தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.
Hindi theriyadhu poya - @NitishKumar ji Dravidian style reply to your unsolicited advise 💪🏼Dotted Indi alliance and its partners 😂 pic.twitter.com/0rbUgvZ4tJ
— karthik gopinath (@karthikgnath) January 13, 2024
ரகு தாத்தா ட்ரைலர்:
அந்த ட்ரைலர் முழுக்க இந்தி திணிப்பு விவகாரத்தை தான் பேசப்பட்டிருக்கிறது. ட்ரைலர் ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ், இந்தியை திணிக்காதே, ஹிந்தி எக்ஸாம் எழுதுனா தான் எனக்கு ப்ரமோஷன் கிடைக்குமா? எனக்கு ப்ரமோஷன் வேண்டாம். இந்தி தெரியாது போயா என்று இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி இருப்பார். இதனால் இந்த ட்ரைலர் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=C4qXQbHo-U8
இசை வெளியீட்டு விழா:
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் கீர்த்தி சுரேஷ், இது எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணம். இயக்குனர் சுமன், விஜய் உடன் சேர்ந்து எனக்கு கதையை சொல்லிவிட்டு உடனே சிரித்து விடுவார். பிறகு என்னை பார்ப்பார். நாங்களும் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும்போது, காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டீங்களா என்ற தயக்கத்துடனே பார்ப்பார். இருந்தாலும், அவருடைய கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் நடிக்கிறேன் என்று சம்மதம் சம்மதித்தேன்.

படம் குறித்து சொன்னது:
இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. பிரபலமான தயாரிப்பு ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நான் நடிக்கிறேன் என்பது இன்னும் கூடுதல் பெருமை. ரகு தாத்தா ஒரு முழுமையான காமெடி படம். இந்த படம் இந்தி திணிப்பை பற்றி எல்லாம் பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றிதான் பேசுகிறது. எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தில் ஒரு சின்ன மெசேஜ் சொல்லி இருக்கோம். ஆனால், அது பிரச்சாரமாக இருக்காது. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே புரியும் என்று கூறியிருக்கிறார்.






