தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நடைபெற்றது. மேலும், ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்குகள் திறக்கப்படும்போது

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதல் திரைப்படமாக வெளியாகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான கேயார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

Advertisement

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸின் பரவல் சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படத்தை திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும். அது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சாதாரண விஷயமல்ல. அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்க ஆசைப்படுவார்கள்.

அப்படி வருபவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும். மேலும், தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பைச் சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.

Advertisement
Advertisement