Kgf ஷூட்டிங்கில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டாரா யாஷ் ? – Kgf நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

0
447
Kgf
- Advertisement -

கே ஜி எஃப் படப்பிடிப்பில் யஷ் தவறாக நடந்து கொண்டார் என்று பரவிய சர்ச்சைக்கு நடிகை ஸ்ரீநிதி செட்டி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

கேஜிஎப் படம் குறித்த தகவல்:

மேலும், இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

ஸ்ரீநிதி ஷெட்டி திரைப்பயணம்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஸ்ரீநிதி செட்டி. இவர் இந்திய மாடல் அழகி ஆவார். இவர் மாடல் அழகி போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவர் கேஜிஎப் படத்தின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார். அதன் பின் தமிழில் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த கோப்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

யஷ் குறித்த சர்ச்சை:

இப்படி ஒரு நிலையில் கே ஜி எஃப் படப்பிடிப்பில் ஸ்ரீநிதி செட்டியிடம் யஷ் தவறாக நடந்து கொண்டு தொல்லை செய்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ரீநிதி செட்டி விளக்கம் ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர், சிலர் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஸ்ரீநிதி ஷெட்டி கொடுத்த விளக்கம்:

கே ஜி எஃப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யஷ் உடன் பணியாற்றியது உண்மையிலேயே நான் செய்த ஒரு பாக்கியம். அவர் ஒரு ஜென்டில்மேன், சிறந்த வழிகாட்டி. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும் போது எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் தொல்லையும் ஏற்படவில்லை. அவருடன் இணைந்து நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதுமே யஷ் உடைய ரசிகையாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement