பிறந்தநாளில் புகைப்படத்தை பதிவிட்ட குஷ்புவின் மகள். ஸ்லிம் தோற்றத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்.

By Rajkumar · 26/1/2020

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு 'வருஷம் 16' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.

சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : பிரம்மாண்ட கூட்டணியில் இணைந்து விட்டேன். விரைவில் பர்ஸ்ட் லுக். முதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தர்சன்.

மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.

https://twitter.com/AnanditaSundar/status/1221144606475046912

இந்த நிலையில் குஷ்பூவின் மகள்களின் உருவத்தை கேலி செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்போது குஷ்புவின் மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமீபத்தில் அனந்திதா தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் முன்பை விட படு ஸ்லிம்மாக இருப்பதை கண்டு பலரும் வியந்து போய்யுள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full