பிரம்மாண்ட கூட்டணியில் இணைந்து விட்டேன். விரைவில் பர்ஸ்ட் லுக். முதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தர்சன்.

0
15533
Tharshan
Tharshan
- Advertisement -

விஜய் தொலைகாட்சியை நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் பல்வேறு பரிச்சயமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். அதில் மிகவும் முக்கியமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே தர்ஷன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தர்சன் இறுதிகட்ட போட்டியாளராக செல்வார் என்றும், பிக் பாஸ் சீசன் 3-யின் டைட்டில் வின்னர் ஆகக் கூடிய வாய்ப்பு தர்சனுக்கு உள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவராலும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், என்ன நடந்தது என்று இன்னும் வரை யாருக்கும் புரியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருந்தது தர்சன் உடைய எலிமினேஷன் தான். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றம் தற்போது கூட யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் பட்டத்தை முகென் தட்டி சென்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தர்சன் தன்னுடைய நண்பர்களுடன் ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என பயங்கர ஜாலியாக கொண்டாடி வருகிறார்.

இதையும் பாருங்க : ஆமா, யார் இந்த பொண்ணு ? மீண்டும் சித்து விளையாட்ட ஆரம்பித்து விட்டாரா சிம்பு?

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நிகழ்வில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்சனை நடிக்க ஒப்பந்தம் செய்வதாக அவர் அறிவித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், தர்ஷனும் இதுகுறித்து எதுவும் இதுவரை கூற வில்லை.

இந்த நிலையில் தனது முதல் படம் குறித்து தர்ஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இன்று (ஜனவரி 25) தான் என்னுடைய முதல் படத்தில் கையெழுத்து இட்ட நாள். நிறைய கதையை கேட்டிருந்தேன். ஆனால், இந்த படம் தான் என்னுடைய மனதை தொட்டது. மேலும், இந்த குழுவும் ஒரு பிரம்மாண்ட குழு முதல் படத்திலேயே கிடைப்பது ஆண்டவனுக்கு தான் நன்றி கூற வேண்டும். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கூறியுள்ளார் தர்ஷன்.

-விளம்பரம்-
Advertisement