ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த சாந்தனுவின் மனைவி கிகி. எக்குத்தப்பாக கமன்ட் போட்ட ரசிகர்.

0
8181
kiki
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ நிகழ்ச்சிகளை மக்களுக்கு பிடித்தமான வகையில் கொண்டு செல்வதில் தொகுப்பளர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் ஆண் தொகுப்பாளர்களை விட பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். டிடி, பாவனா, ரம்யா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் பெண் தொகுப்பாளிகளின் லிஸ்டில் கிகியும் ஒருவர்.

-விளம்பரம்-
View this post on Instagram

?‍♀️

A post shared by Kiki Vijay? (@kikivijay11) on

தொகுப்பாளினி கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார.

- Advertisement -

இவர் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணதிற்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார் கிகி. மேலும், கிகி டான்ஸ் ஸ்கூல் என்று தனியாக நடன பள்ளி ஒன்றையும் வெற்றிகரமாக இயக்கி நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த நடன பள்ளியில் இவர் தனது குழுவுடன் நடனமாடிய வீடியோக்கள் பல ரசிகர்கள் மத்தியில் வைரலானது. எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கிகி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.

Advertisement