சிகரெட் பிடிக்கும் வீடீயோவை வெளியிட்ட கொலைகாரன் பட நடிகை – தமிழில் கொடுத்த விளக்கம்.

0
1256
ashima
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு இசையமைப்பளர்கள் தற்போது ஹீரோவாக அசத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் லிஸ்டில் விஜய் ஆன்டினியும் ஒருவர். வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ படத்தில் நடித்திருந்தார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு சைமன்இசையமைத்திருந்தார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

Cigarette smoking is injurious for health and so is roaming on the streets of Hyderabad!!Please stay home and be safe! We all are troubling Mother Earth so much that Mother Earth is troubling us back. Don’t trouble the earth or earth will trouble you! Mother Earth is not the trouble, it is the one ultimate truth! (P.s Practicing cigarette smoking for a new role—A lot of you will be shocked to see me smoke but why are you not getting shocked making Mother Earth smoke by the pollution your cars, scooters, factories—that is something that should shock you more) Love 🌸 Ashima 🦢 புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன. நாம் பூமித்தாயை நிறைய காயப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி. ( பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது. ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்) அன்புடன் ஆஷிமா #nature #disasterpreparedness #loveashima #besafe #stayhome #hyderabad #ig_hyderabad #ig_chennai #loveashima #misssydneyaustralia #misssydneyelegance #smokingisinjurioustohealth #ashima #ashimanarwal #naturelovers #livepositively #environmentawareness #india2050 #discoveryplus #darlingescape #love #ig_india #disasters #natureispowerful #donttroublethetrouble #balakrishna #balakrishnadialogue

A post shared by Ashima Narwal (@iamashimanarwal) on

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அஷிமா நர்வால் என்பவர் நடித்திருந்தார். தமிழுக்கு இவர், புதிது என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10 வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பிற்காக சென்று விட்டார்.

- Advertisement -

மேலும், மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். அதன் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள அவர் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஐதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படித்தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுற்றி அடித்திருக்கிறது, மரங்கள் அனைத்தும் கீழே விழுந்து விதிகளை மழை மறைத்திருக்கின்றன. நான் பூமித்தாயை நிறைய காயப்படுத்தி விட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனைத் தருகிறார். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பி தாக்குவார்.

-விளம்பரம்-
Advertisement