18 ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்த கோலங்கள் புகழ் அபி சரவணன் ஜோடி- இம்முறை சன் டிவில இல்ல.

0
2912
devayani
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியளாக திகழ்ந்த கோலங்கள் சீரியல் ஜோடி அபி சரவணன் ஜோடி 18 ஆண்டுகளுக்கும் பின் இணைந்துள்ளது. 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1993ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பெங்காலி, மலையாளம் படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டாசினிங்கி என்ற படம் மூலம் தான்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் தேவயானி. தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தேவயானி, 1996 முதல் 2000ம் ஆண்டு வரை 35 படங்களில் நடித்திருந்தார்.தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல ஹீரோக்களுடனும் நடித்து வந்தார்.

- Advertisement -

தேவயானிக்கு தற்போது 46 வயது ஆகிறது தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தேவயானி.

இதில் சிறப்பு என்னவென்றால் 18 வருடம் கழித்து அபி – பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைகிறது. ஆம் கோலங்கள் சீரியலில் பாஸ்கராக தேவயானியுடன் நடித்த அபிஷேக், இந்த புதிய சீரியலிலும் நடிக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் “புதுப்புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் தான் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்றுள்ளது. அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement