விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அதே போல சமீபத்தில் மிஃஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கி இருந்தார் பாலா. பாலா இப்படி தொடர்ந்து உதவி செய்து வருவதை பாராட்டி வந்தாலும் பாலா இப்படி செய்வதை குறைத்துகொள்ள வேண்டும் என்றும் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

சினிமாவை பொறுத்த வரை உச்ச நட்சத்திர நடிகர்கள் மட்டும் தான் வசதி வாய்ப்பு அப்படியே இருக்கும். ஆனால், பாலாவை போல எத்தனையோ சிறு நடிகர்கள் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இறந்ததை பார்த்துள்ளோம். எனவே, பாலா காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு இன்னங்க, இப்போது தனக்காக பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பலரின் அட்வைஸ்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நெக்னாமலை கிராம மக்களுக்கு அவசர ஊர்தி ஒன்றை நடிகர் KPY பாலா வழங்கினார். இதன் பின்னர் பேசிய அவர் ‘என்னதான் நல்லது செய்தாலும், சமூக வலைத்தளம் மூலம் உனக்கு பின்னாடி யார் செயல்படுகிறார்கள்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். ஆமாம். எனக்கு பின் நிறைய பேர் இருக்கின்றார்கள், அவமானமும், கஷ்டமும் தான் எனக்கு பின் இருக்கின்றார்கள்.

Advertisement

மேலும் சிலர் சமூக வலைதள கமெண்டில் இப்படியே செய்து கொண்டிருந்தால், நீ சிக்னலில் பிச்சை தான் எடுப்ப, அப்போ கூட நான் பிச்ச போடம தான் போவன் என பதிவிடுகின்றனர். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறோனோ? அந்த சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் வரும் அது எனக்கு சந்தோஷம், என்னால் முடிந்த வரை கொடுப்பேன். எதிர்காலம் என்னை காப்பாற்றும் என்று பேசி இருக்கிறார்.

Advertisement