இன்ஸ்ட்டா பெண்ணால் வந்த வினை, பிரேக்கப் வரை யோசித்துள்ள தீனாவின் காதல் மனைவி

0
2595
Dheena
- Advertisement -

தீனாவின் முன்னாள் காதல் குறித்து அவருடைய மனைவி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தீனா. இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நாம் யாராலும் மறக்க முடியாது.

-விளம்பரம்-

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ என்ற படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன் பின்னர் ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது கைதி படம் தான்.

- Advertisement -

தீனா திரைப்பயணம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான் தீனா மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். இதை அடுத்து இயக்குனர் லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஸ்டேஜ் ஷோக்களை கூட செய்து கொண்டிருக்கின்றார்.

தீனா திருமணம்:

மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் தன்னுடைய சொந்த ஊரில் வீடு கட்டி முடித்திருந்தார். அதனுடைய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி தீனாவிற்கு திருமணம் நடந்து இருக்கிறது. தீனாவுக்கும் பிரகதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிகிறார். திருமணம் பட்டுக்கோட்டையில் நடந்திருக்கிறது. மணப்பெண்ணின் சொந்த ஊரும் பட்டுக்கோட்டையில் உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

தீனா மனைவி அளித்த பேட்டி:

டிவி, சினிமா பிரபலங்கள் எல்லாம் இம்மாதம் 10ம் தேதி சென்னையில் நடந்த வரவேற்பில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் தீனா தன்னுடைய மனைவியோடு பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தீனாவின் உடைய மனைவி கூறியிருந்தது, திருமணத்திற்கு முன்பு தீனாவிற்கு ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருந்தார்.

தீனா காதல் குறித்து சொன்னது:

அதுவும் நீண்ட லவ் மெசேஜ். இதுவரைக்கும் நான் கூட அப்படி தீனாவுக்கு மெசேஜ் செய்யவில்லை. அந்த மாதிரி மெசேஜ் செஞ்சிருந்தார்கள். ஆனால், அதற்கு தீனா ஒரு பதிலும் கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவர் அதற்கு பதில் கொடுத்து இருந்தால் நான் அப்பவே பிரேக் அப் பண்ணி இருப்பேன் என்று கூறி இருந்தார். இதுவரை எத்தனையோ பிரபலங்களை பிராங் செய்து அலறவிட்ட தீனா பொண்டாட்டி பேசிய பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பம்பி கொண்டு அமைதியாக இருக்கிறார்.

Advertisement