வடிவேலு பாலாஜியின் குரலை மிமிக்கிரி செய்த Kpy பிரபலம் – கதறி அழுத புகழ் – வீடியோ இதோ.

0
2897
pugal
- Advertisement -

மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CFw0MeqhwaL/?igshid=1vqi4zosugdqg

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது. வடிவேல் பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. மேலும், வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, ராமர், Kpy பாலா புகழ் என்று பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா என்று கதறி அழுது இருந்தார்.

https://www.instagram.com/p/CFwlLNSpK1L/?igshid=13zt3nvq7eddg

இப்படி ஒரு நிலையில் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜியிடும் பணியாற்றிய kpy பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். அதில் வடிவேலு பாலாஜியின் குரலை போலவே Kpy சதிஷ் மிமிக்ரி செய்ய, அதை கேட்ட புகழ் கதறி அழுதுள்ளார். இதை பார்து மற்றவர்களும் கண்ணீர் வடித்தனர்.

-விளம்பரம்-
Advertisement