பிக்பாஸ் வீட்டில் க்ரிஷ் !!!

By Ajju · 12/9/2017
விஜய் டீவியில் கமல் தொகுத்து வழங்கிவரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். இந்நிலையில் பாடகரும் நடிகருமான க்ரிஷ் நேற்று ட்விட்டரில் "நான் ஒரு நல்ல விஷயத்திற்காக ட்விட்டரை விட்டு விலகுகிறேன்" என பதிவுசெய்தார். பதிவுசெய்த பின்னர் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள் "பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறீர்களா?" என்று கேள்வியெழுப்பிய வண்ணம் உள்ளனர். இதையும் படிங்க: விஜய் பற்றி விவேக் என்ன சொல்கிறார் தெரியுமா!! பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் பிக்பாஸ் வீட்டிற்குள் க்ரிஷ் செல்வாரா அல்லது அவர் கூறிய அந்த நல்ல விஷயம் எதுவென்று விரைவில் தெரிந்துவிடும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full