இந்த படத்தின் பாடலை டிக் டாக் செய்தால் தங்க பரிசு.! எந்த படத்திற்கு தெரியுமா ?

0
553
Krishnam
- Advertisement -

கடந்த சில மாதங்களாக இளசுகள் மத்தியில் டிக் டாக் என்ற செயலி பெரும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பல்வேறு சினிமா வசனங்களையும், பாடல்களையும் டப் செய்து வருகின்றனர். அந்த வகையில் கிரிஷ்ணம் என்ற படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு சிறப்பான முறையில் டிக்டாக் வீடியோ எடுத்து அனுப்புபவர்களுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Krishnam

புதுமுக இயக்குனர் தினேஷ் பாபு இயக்கியுள்ள இந்த படத்தை பி.என்.பலராம் என்பவர் தயாரித்துள்ளார். அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை தயாரித்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பாக்யராஜும் பங்கேற்றிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், தங்களது படத்திலுள்ள பாடல்கள் அல்லது காட்சியை டிக்டாக் செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு போட்டி ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. அதில் சிறந்த வீடியோ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை அனுப்பியவர்களுக்கு குருவாயூரப்பன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட 5 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Krishnam

இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 9746697883 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தங்களது வீடியோவை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் முக்கிய நிபந்தனையாக வீடியோ பதிவிடுபவர்கள், மறக்காமல் #krishnamcontest எனும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement