பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் 'ஆதவன்' படம் குறித்து கூறியிருக்கும் சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரமிக்க வைக்கும் பல பிரமாதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.

அந்த வகையில் இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய படம் தான் 'ஆதவன்'. இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, ஆனந்த் பாபு, முரளி, சரோஜா தேவி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. மேலும், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.
கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆதவன் படம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசி இருந்தார். குறிப்பாக ஏஐ டெக்னாலஜி எதுவும் இல்லாமல் நடிகர் சூர்யாவை சிறிய பையனாக படத்தில் காட்டியது எப்படி என்பது குறித்து பேசி உள்ளார். அதில், இப்போ ஏஐ டெக்னாலஜி இருக்கு. நிறைய அனிமேஷன் எல்லாம் வந்திருக்கு. முகத்தை ரீப்ளேஸ்மென்ட் பண்ற மாதிரி எல்லாமே இருக்கு. ஆனால் அன்று, ஆதவன் படத்தில் சூர்யாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் அவரே நடித்தால் நல்லா இருக்கும் என்று நான் நினைத்தேன்.
https://www.youtube.com/shorts/mHX8weLzPCU
ஆதவன் குறித்து:
அதற்காக வெளிநாடுகளில் எல்லாம் விசாரித்தோம். இந்த படத்தினுடைய பட்ஜெட்டே 21 கோடி தான் இருக்கும். ஆனால், அவர்கள் அந்த ரெண்டு நிமிஷம் காட்சிக்காக 8-9 கோடி கேட்டார்கள். படத்தினுடைய பட்ஜெட்டே 21 கோடி தான் அதில் 8 கோடியை கொடுத்துவிட்டு எப்படி படம் எடுக்க முடியும் என்று அந்த பிளானை விட்டுவிட்டோம். அதற்குப் பிறகுதான் நான், கிரீன் மேட்டில் ஒரு சின்னப் பையனை வைத்து முதலில் எடுப்போம். அதே கிரீன் மேட்டில் சூர்யாவை வைத்தும் எடுப்போம். அப்புறம் பேக் ட்ராப்பை தனியாக எடுப்போம் என்று சொன்னேன்.
De-aged Suriya in Aadhavan! 😍 pic.twitter.com/h3pURb2yNN
— Simply South (@SimplySouthApp) August 5, 2024
சிறு வயது சூரியா:
ஏனென்றால் 'தசாவதாரம்' படத்தில் 13-14 லேயர் எல்லாம் எடுத்தோம். ஆனால், இதில் மூன்று லேயர் தான். ஒன்னு பேக் டிராப், ஒன்னு சின்ன பையன் மற்றும் ஆர்டிஸ்டை வைத்து, இன்னொன்னு சூர்யாவை மட்டும் வைத்து. அந்த மாதிரி பண்ணுங்க. பண்ணதுக்கு அப்புறம் நீங்க சின்னப் பையன் மாதிரி ஸ்குயூஸ்(Squeeze) பண்ணி காட்டணும். அதை நீங்க பர்ஃபெக்ட்டா பண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டேன். பட்ஜெட் எவ்வளவு என்றால் வெளிநாட்டில் கேட்டது 8 கோடி, ஆனால், நாங்கள் 28 லட்சத்தில் முடித்தோம் என்று ஆதவன் பட சீக்ரெட்டை கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து உள்ளார்.

பாராட்டுக்குரிய விஷயம்:
சமீப காலமாக வரும் படங்களில், என்னதான் டெக்னாலஜி உபயோகப்படுத்தி இருந்தாலும் மக்கள் அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து விடுகிறார்கள். சமீபத்தில் வெளியான 'கோட்' படத்தின் மூன்றாவது பாடலில் வரும் சிறிய வயது விஜய் குறித்து கூட பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டே பெரிய அளவில் டெக்னாலஜி இல்லாத போதிலும், கே.எஸ்.ரவிக்குமார் குறைந்த பட்ஜெட்டில் இது போல் காட்சிகள் எடுத்திருக்கிறார் என்பது பாராட்டக்கூடிய விஷயம் தான்.






