தமிழ் சினிமா உலகில் சிம்பு அவர்கள் 20 ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பஞ்சம் கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்தார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்து கொண்டு வந்தார்கள். பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. நடிகர் சிம்பு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. இப்படி சிம்பு நடிக்கும் படம் குறித்து எதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

Advertisement

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்கும் போது இந்த மாதிரி சர்ச்சைகள் எழுந்ததாக சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறி உள்ளார். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் “சரவணா”. மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, சிம்பு பற்றி எல்லாரும் சொல்வாங்க. அவர் ஷூட்டிங்க்கு சரியான நேரத்துக்கு வர மாட்டாருன்னு.

வீடியோவில் 6: 30 பின் பார்க்கவும்

Advertisement

நம்ப அவங்க கிட்ட நடந்துக்கிற விதம் பொருத்து தான் எல்லாம் நடக்கும். முதல்ல ஒரு நடிகருக்கு என்ன ப்ளஸ், மைனஸ் பற்றி தெரிஞ்சுகிட்டு தான் அவர்களோடு படத்தில் ட்ராவல் பண்ணனும். நான் சரவணா படத்தின் படப்பிடிப்பு போது முதல் இரண்டு நாள் சொன்ன நேரத்துக்கு சிம்பு வரமாட்டார். மூன்றாவது நாள் அவர் லேட்டா வந்தாரு நான் அவர்கிட்ட போய் இந்த படத்தில் இருந்து நான் விலகி கொள்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எழுதிக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். உடனே சிம்பு ஏன் சார், என்ன ஆச்சு சார் என்று கேட்டார்.

Advertisement

நான் ஏழு மணிக்கு ஸ்டார்ட் ரெடி பண்ணி வெயிட் பண்ணி பார்த்தா நீங்க 11 மணிக்கு தான் வரிங்க. நீங்க 11 மணிக்கு தான் வருவீங்கன்னு சொன்னா, அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டார்ட் ரெடி பண்ணிக்கலாம். முதல்லயே நீங்க எந்த டைம் வருவீங்கன்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டார்ட் ரெடி பண்ணிடுவேன். தசாவதாரம், அஜித்தின் வரலாறு படங்களின் கேப்பில் தான் நான் இந்த படத்தை இயக்கி வருகிறேன் என்று சொன்னேன். நீங்க எப்ப வேணாலும் வாங்க, நீங்க வருகிற டைம் மட்டும் முன்னாடி சொல்லுங்க அது கேத்த மாதிரி நாங்க ஷாட் ரெடி பண்ணிடுவோன். அதுக்கு பின் அவர் ஷூட்டிங்க்கு சரியாக வந்துடுவாரு என்று கூறினார் .

Advertisement